Monday, March 2, 2009

பூஜை அறை

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருப்பது அவ்வீட்டின் செழிப்பையும் தெய்வீகத்தையும் நிலைநிறுத்தும். எவ்வளவுதான் வீட்டை அலங்காரம் செய்தாலும், பூஜை அறை என்று ஒன்று இல்லை என்றால் வீட்டில் மங்களம் குறையும். நிறைய வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன். ஹால், பெட்ரூம், போன்ற அறைகளை அலங்காரம் செய்துவிட்டு பூஜை அறையை மறந்துவிடுகிறார்கள். பூஜை அறைக்கு ஏக போக அலங்காரங்கள் தேவை இல்லை. ஆனால், கடவுளின் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும், ஒரு மண் விளக்காவது ஏற்றி வைக்க வேண்டும். தினமும், இரண்டு நிமிடம் மனம் ஒன்றி த்யானம் செய்தால் போதும் . தினமும், கடவுளுக்கு எதாவது படைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. விளக்கை மற்றும் ஏற்றி, த்யானம் செய்து, வெள்ளிகிழமைகளில் பழமோ, பாலோ அல்லது நய்வேத்யமோ செய்தாலே போதுமானது. தினமும், நமக்கு கிடைக்கும் உணவுக்கு கடவுளுக்கு நன்றி செலுத்தினால், போதும். தடபுடலாக பூஜை, வெள்ளியிலே கவசம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கடவுள் எதிர்பார்ப்பதில்லை. உண்மையான பக்தியும், தூய்மையான உள்ளமும் மட்டுமே கடவுள் எதிர்பார்க்கும் முதல் படி.....

நாம் உச்சரிக்கும் மந்திரங்களுக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொண்டு உச்சரித்தால் மேலும் சிறப்பு. மந்திரங்கள் தெரியாவிட்டால் வெறும் "ஓம்" என்ற உச்சரிப்பை நாம் கடைபிடித்து நாம் மனமுருக வேண்டினால் இறைவன் அருள் நிச்சயம் உண்டு. நாம் வழிபடும் தெய்வங்கள் நிறைய. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் மீது நம்பிக்கை இருக்கும். நாம் வழிபடும் சக்திக்கு ஒரு உருவம் வேண்டியுள்ளதால் நாம் இறைவனை பல உருவங்களில் வழிபடுகிறோம். எல்லா தெய்வங்களும் ஒன்றே. அனைத்தும் ஒரு ஒளியில் தான் அடங்கியுள்ளது. நம்பிக்கையின் உருவமாக ஒவ்வொரு தெய்வத்தை வணங்குகிறோம். மொத்தத்தில் எல்லாமும் ஒரு ஒளியை நோக்கித்தான் செல்கிறது.

3 comments:

  1. Sir my home pooja romm in Vayu Moolai. And I am keeping the swami vigragas in the vayu corner. I understand it is not ok. What is the effect of keeping the pooja room/swami vigragas in this corner. Weather it is to be relocated in the same room in Kanni moolai.
    Pleas reply and valuable suggestion to me.
    Kajendran.R
    kaj1440@gmail.co
    Kajendran.r@tnpl.co.in

    ReplyDelete
  2. usefull information
    https://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY

    ReplyDelete
  3. excellent post https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

    ReplyDelete